Monday , August 19 2019
Home / த.மா.கா செய்திகள் / `துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு?’- ஜி.கே.வாசன்
Fresa XPress

`துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு?’- ஜி.கே.வாசன்

கும்பகோணம் துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது என்பது குறித்து ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள துக்காச்சியில் சில நாள்களுக்கு முன்பு ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றன. எதற்காக அமைக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். மீத்தேன் அல்லது ஷேல் காஸ் எடுப்பதற்கான ஆரம்பகட்ட பணியாக இருக்குமோ என்ற அச்சத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். “மக்கள் எழுப்பும் கேள்விக்கு ஏன் அதிகாரிகள் பதில் அளிக்க மறுக்கிறார்கள். இதுகுறித்து ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி,கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “துக்காச்சி கிராமத்தில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான உண்மை நிலை, அப்பகுதி மக்களுக்குத் தெரிய வேண்டும். அப்பணிகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு சரியான விளக்கம் அளிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இதற்கு ஆட்சியாளர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். மீத்தேன் எடுத்தால் விளைநிலங்கள் அழிந்து போகும். நீர் ஆதாரங்கள் மாசுபடும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதனால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவற்றையெல்லாம் மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, ஆழ்குழாய் அமைக்கும் பணி மேற்கொள்வதற்கான உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும். மக்கள் நலத்திட்டப்பணிகள் செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கான விளக்கத்தை வெளியிடுவதில் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தயக்கம் இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

GK-Vasan14

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …