Tuesday , June 18 2019
Home / த.மா.கா செய்திகள் / பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும்: ஜி.கே.வாசன்
Fresa XPress

பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும்: ஜி.கே.வாசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து ஜி.கே.வாசன் பேசியது: வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து, மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

petrol-price
பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து அதன் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் பெட்ரோல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் அல்லது முழுமையாக வரியை ரத்து செய்ய வேண்டும். முக்கியமான இந்த விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது என்றார் அவர்.

petrol-price-hike1
மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மாநில நிர்வாகிகள் கத்திப்பாரா ஜெனார்த்தனன், விடியல் சேகர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …