Sunday , September 22 2019
Home / த.மா.கா செய்திகள் / பட்டாசு ஆலை குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Fresa XPress

பட்டாசு ஆலை குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 

பட்டாசு ஆலை மற்றும் குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. பட்டாசுத் தொழிலை நம்பியே லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் வாழ்கின்றன. அப்படி  இருக்கும் போது பட்டாசுத் தொழிலை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு இருக்கிறது.

ஆனால் தமிழக அரசு பட்டாசுத் தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்கள் நலன் காப்பதற்கும் தொடர் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே. காரணம் தொடர்ந்து அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் தீ  விபத்து, வெடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் பட்டாசு உற்பத்தி செய்யும் இடம், உற்பத்தி செய்த பட்டாசுகளை வைத்திருக்கும் இடம் ஆகியவை பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறதா என்பதை தொடர்ந்து  கண்காணிக்காமல் இருப்பது தான். தமிழக அரசு தற்போது சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக கொடுக்க வேண்டும்.
GK-Vasan12
மேலும் தமிழக அரசு, அரசு அதிகாரிகள், பட்டாசு ஆலையின் உரிமையாளர்கள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அந்த குழுவானது தொடர்ந்து பட்டாசு ஆலை தொடர்பாக  தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு ஆலையின் பாதுகாப்பு, உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.எனவே தமிழகத்தில் இனிமேல் பட்டாசு ஆலையிலோ, பட்டாசுகள் வைத்திருக்கும் இடங்களிலோ தொழிலாளர்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு இருக்கும் என்ற உறுதியோடு தொழிலை தொடர வேண்டும் என்பதில் அரசும், ஆலை  உரிமையாளர்களும் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …