myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , October 18 2018
Home / த.மா.கா செய்திகள் / தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை வேண்டும் : மத்திய, மாநில அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Fresa Technologies

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை வேண்டும் : மத்திய, மாநில அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கேரளாவின் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது கப்பல் மோதியதால் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் நீண்ட காலமாக பிரச்னைக்குரியதாக நீடிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

gk-vasan1

இந்நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் 2 படகுகளில் நேற்று முன்தினம் இரவில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் படகுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டுத் தொகையை பெறவும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் மீனவர்கள் பிரச்னை தொடர்பாக உடனடியாக அமைச்சர்கள், அதிகாரிகள், மீனவப்பிரதிநிதிகள் கொண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, முக்கிய முடிவுகள்எடுக்க வேண்டும். மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …

Bitnami