Home / த.மா.கா செய்திகள் / கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதில் தவறு இல்லை – ஜி.கே.வாசன்
Fresa XPress

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதில் தவறு இல்லை – ஜி.கே.வாசன்

 

முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி திருச்சி காவிரி ஆற்றில் நேற்று கரைக்கப்பட்டது. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நாட்டின் முதுபெரும் தலைவர், அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவர் வாஜ்பாய். அத்தகைய உயர்ந்த தலைவரின் அஸ்தி திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்படுவது பெருமை. உலகம் முழுவதும் தமிழர்களால் மதிக்கப்பட்டவர் கருணாநிதி. மூத்த அரசியல்வாதியான அவரது மறைவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்துவது கருணாநிதிக்கு புகழை சேர்க்கும். இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதில் தவறு இல்லை. மணல் கொள்ளையால் தான் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்தன. அணையில் இருந்து தண்ணீர் வீணாக செல்வதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீர் மேலாண்மை திட்ட முறையை தமிழக அரசு முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் தான் கொள்ளிடம் அணை உடைந்தது. மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்”
GK-Vasan11
Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …