Monday , August 19 2019
Home / த.மா.கா செய்திகள் / கடைமடைக்குத் தண்ணீர் போகாததற்கு தமிழக அரசே காரணம் : ஜி.கே.வாசன்
Fresa XPress

கடைமடைக்குத் தண்ணீர் போகாததற்கு தமிழக அரசே காரணம் : ஜி.கே.வாசன்

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடைக்குத் தண்ணீர் போய் சேராததற்கு தமிழக அரசே காரணம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள் விழாவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்தனர். இதன்படி, கோவை சிங்காநல்லூரில் த.மா.கா. சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் தின விழாவுக்கு மாநகர் தெற்கு மாவட்டத் தலைவர் வி.வி.வாசன் தலைமை வகித்தார்.

இதில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

தமிழகத்தில் பல ஆண்டுகளாக விளைநிலங்கள் காய்ந்து கிடக்கும் நிலையில் காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் நீர் முறையான காலத்தில் கிடைக்கவில்லை.  காமராஜருக்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களும், தற்போது இருப்பவர்களும் நீரை சேமிக்காததுதான் காரணம். அதே சமயம் காவிரி நீரைப் பெற்றுத் தருவதிலும் கூட திராவிடக் கட்சிகள் சுணக்கம் காட்டி வந்தன.

இனிமேலாவது காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்புச் சுவர் அமைத்தால் மட்டுமே பாசனக் கால்வாய்களில் தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது கால்வாயின் கடைக்கோடி வரையில் சென்றடையவில்லை. மேட்டூர் அணைக்கு கீழாக காவிரியின் குறுக்கே தேவையான தடுப்பணைகளை அரசு கட்டியிருக்க வேண்டும்.

 மேலும், உரிய காலத்தில் காவிரி நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போதும் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் போய்ச் சேராததற்கு தமிழக அரசு குடிமராமத்துப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததே காரணம். பல ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் புதர் மண்டிக்கிடக்கின்றன.

தமிழக அரசின் தவறான நீர் மேலாண்மைதான் இதற்கு காரணம் என்றார்.

இதில், முன்னாள் எம்.பி.ஞானதேசிகன், மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் விடியல் சேகர் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

GK-Vasan11

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …