Home / த.மா.கா செய்திகள் / லோக் ஆயுக்தா சட்டம்; இனியாவது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட வேண்டும்:
Fresa XPress

லோக் ஆயுக்தா சட்டம்; இனியாவது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட வேண்டும்:

தமிழகத்தில் ஊழல், லஞ்சத்துக்கு இடம் இல்லை என்ற நிலையை லோக் ஆயுக்தா சட்டம் ஏற்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு திங்கள்கிழமை ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்டது.இது வரவேற்கத்தக்கது. குறிப்பாக எதிர்கட்சிகளும், பொதுமக்களும் லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மேலும் சில அம்சங்களை சேர்த்து, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

kamarajar

எனவே இந்த அமைப்பு முழு அதிகாரம் பெற்ற தன்னிச்சையான அமைப்பாக செயல்படுவதற்கும், வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதற்கும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஏதுவாக இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்.

லஞ்சம், ஊழல், சுரண்டல் போன்றவற்றில் ஈடுபடுகின்ற முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக லோக் ஆயுக்தா செயல்பட வேண்டும். அதாவது காமராஜர் ஆட்சியை பிரதிபலிக்கும் வகையில் ஆட்சியாளர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …