myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , October 18 2018
Home / த.மா.கா செய்திகள் / தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா காலம் தாழ்த்தாமல் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன்
Fresa Technologies

தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா காலம் தாழ்த்தாமல் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசு – தமிழகத்திற்கு இம்மாதம் மட்டும் 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது நீண்ட காலமாக காத்துக்கிடந்த விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 குறிப்பாக வறட்சியின் விளிம்பில் பொறுமையாக இருந்த விவசாயிகளுக்கு இந்த மாதம் முதல் காவிரியில் இருந்து உரிய தண்ணீர் கிடைக்கும் என்பது ஒரு நல்ல செய்தியாகும். மேலும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்ற, போராடிய விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாக ஆணையக் கூட்டத்தின் உத்தரவு அமைந்திருக்கிறது.

எனவே கர்நாடக அரசு – காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு செவி சாய்த்து, காலம் தாழ்த்தாமல் காவிரி நீரை திறந்து விட வேண்டும். அது தான் ஆணையத்துக்கும், சட்டத்திற்கும் உட்பட்ட நடவடிக்கையாக அமையும். இந்த நிலை தொடர வேண்டும். அப்படி இந்த மாதத்திற்கான தண்ணீரை முறைப்படி கர்நாடக அரசு காலத்தே திறந்துவிட்டால் தான் தமிழக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தண்ணீர் கிடைக்கப்பெற்று பயன்பெறுவார்கள்.

ஏற்கெனவே காவிரியில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் வராததால் மேட்டூர் அணையை திறக்க முடியாமல், விவசாயிகள் குறுவை சாகுபடியை சரிவர செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்து சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

எனவே மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியோடு இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுவதோடு, வருகின்ற மாதம் தோறும் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்பதில் மேலாண்மை ஆணையம் கண்காணிப்பை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதன் மூலம் இனி வரும் காலங்களில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீர் உரிய காலத்தில் முறையாக, முழுமையாக கிடைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக்கின்ற முதல் வெற்றியாகும்.

எனவே தற்போதைய மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …

Bitnami