myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , October 18 2018
Home / த.மா.கா செய்திகள் / தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கையிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:
Fresa Technologies

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கையிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சனிக்கிழமை கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். வலைகளை விரித்து மீன்பிடிக்க முயன்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தினர். இதனால் மீனவர்கள் பயந்த நிலையில் மீன்பிடி வலைகளை அப்படியே கடலில் தூக்கி எறிந்து விட்டு கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பை கொடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல மத்திய பாஜக அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் தொடர் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், பாதுகாப்பற்ற தன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேலும் கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்துச் சென்று இலங்கையில் வைத்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளின் எண்ணிக்கை சுமார் 226. இந்த படகுகளை எல்லாம் உடனடியாக மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரையில் சுமார் 42 படகுகள் மட்டுமே மீட்டுக் கொண்டுவரப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள படகுகளில் பெரும்பாலான படகுகள் சேதமடைந்த நிலையில் இருப்பதும், இன்னும் காலம் தாழ்த்தினால் நல்ல நிலையில் உள்ள படகுகளும் சேதமடைந்து பயனற்றதாகப் போய்விடும். இதனையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

எனவே தமிழக அரசு தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகள் அனைத்தையும் மீட்டுக் கொண்டுவரவும், சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை மீட்டுக்கொண்டுவரவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் இலங்கை அரசை கண்டிப்போடு அணுக வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …

Bitnami