myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Friday , December 14 2018
Home / tmc.party / ஓகி புயலின் போது புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை
Fresa Technologies

ஓகி புயலின் போது புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஓகி புயலின் போது புயலால் விவசாயப் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலைக் காப்பாற்ற வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை. அது மட்டுமல்ல விவசாயத் தொழில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் போது அதற்கான நிவாரணத் தொகையை கொடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

 

ockhiஅந்த தொகையையும் உரிய காலத்தே கொடுத்தால் தான் மேற்கொண்டு விவசாயத்தை விவசாயிகளால் தொடர முடியும். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரணம், சலுகைகள், கடன் தள்ளுபடி, கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து விவசாயத்தையும், விவசாயிகளையும், விவசாயக் கூலித் தொழிலாளிகளையும் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை.

ockhi1குறிப்பாக ஓகி புயலின் சீற்றத்தால் மாநிலத்தில் பல மாவட்டப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. அப்போதே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை கொடுக்க மாநில அரசை தமாகா சார்பில் வலியுறுத்தினோம்.

இச்சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும் எனவும் நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரண உதவி, இலவச தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் 2016 – 2017-ல் தமிழகம் முழுவதும் வறட்சியால் சுமார் 5 கோடி தென்னை மரங்கள் காய்ந்து கருகிவிட்டன. இதனால் பல ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களால் தென்னை விவசாயத்தை தொடர முடியவில்லை.

எனவே தமிழக அரசு ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கியது போல 2016 – 17-ல் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கும் 5 கோடி தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கவும், நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முன்வர வேண்டும்.

மேலும் தமிழக அரசு – விவசாயம் செய்வதற்கு தண்ணீரும், போதிய பொருளாதார வசதியும் இல்லாமல் விவசாயத்தொழிலை செய்ய முடியாமல் கடனில் தத்தளிக்கிற விவசாயிகள் நலன் காக்க முதலில் அவர்களின் அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய இந்த சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே நடவடிக்கை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gkvasan

காவிரி வரைவு திட்டம் – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

  காவிரி வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க மத்தியஅரசு கால அவகாசம் கேட்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம். …

Bitnami