myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , December 13 2018
Home / tmc.party / ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
Fresa Technologies

ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

 

லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளான டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும், நீண்ட காலமாக சுங்கக்கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளை மூடவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாள்தோறும் லாரிகளின் மூலமாக சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், டீசல் விலையை நாளுக்கு நாள் அதிகரித்தால் லாரிகளை பொருளாதார ரீதியாக இயக்குவது பெரும் கஷ்டம். டீசல் விலை உயர்வால் லாரி ஓட்டுநர்களுக்கான ஊதியம், சரக்கு கட்டணம், வரி வசூல் என பல்வேறு நடவடிக்கைகளுக்கு லாரி உரிமையாளர்கள் உட்படும்போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்கள் மீது சுமை ஏற்றப்படுகிறது.

 இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளில் ஒன்றான டீசல் விலையைக் குறைக்க பலமுறை வலியுறுத்தியும் இன்னும் அதற்கான முயற்சியில் ஈடுபடாத மத்திய அரசைக் கண்டித்தும், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் சுமார் 7 ரூபாய் 40 காசு உயர்ந்துள்ளது. மேலும் 3 ஆம் நபர் காப்பீட்டுத் தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல சுங்கச்சாவடி கட்டணமும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இப்படி டீசல் விலை உயர்வு, 3 ஆம் நபர் காப்பீட்டுத்தொகை கட்டண உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றால் லாரி தொழில் படிப்படியாக பாதிப்படைந்து தொழில் செய்யமுடியாத நிலையில் லாரி உரிமையாளர்கள் இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் ஏற்கெனவே பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும், முறையிட்டும் அவர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனையெல்லாம் மத்திய அரசு முக்கியப் பிரச்சினையாக கருதவில்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

டீசல் விலை உயர்வாலும், சுங்கக்கட்டண உயர்வாலும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் விலை உயருகிறது. இதனால் அத்தியாவசியமான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இப்படி விலைவாசி உயர்வது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமையாக அமைகிறது.

ஏற்கெனவே போதிய பொருளாதரமின்றி வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் மேலும் விலைவாசி உயர்ந்து இன்னும் அதிக பாதிப்புக்கு உள்ளாகுவர். இன்று நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் இருப்பதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் லாரிகள் இயக்கப்படாது.

லாரிகள் ஓடவில்லையெனில் அரசுக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பும் ஏற்படும். லாரி உரிமையாளர்கள், லாரி தொழிலில் ஈட்பட்டுள்ள தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவது மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை வெளிப்படுத்துகிறது.

எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளான டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும், நீண்ட காலமாக சுங்கக்கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளை மூடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு – லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத்தீர்வு ஏற்படுத்தி தர உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gkvasan

காவிரி வரைவு திட்டம் – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

  காவிரி வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க மத்தியஅரசு கால அவகாசம் கேட்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம். …

Bitnami