myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Sunday , February 24 2019
Home / காவிரி நதி நீர் / விவசாயிகள் ஏமாற்றம்
Fresa Technologies

விவசாயிகள் ஏமாற்றம்

தமிழக அரசு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று அறிவித்திருப்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழக முதல்வர் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதியில் இருந்து வருகின்ற தண்ணீரை நம்பியே தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனம் நடைபெறும்.

குறிப்பாக கடந்த 6 வருடங்களாக ஜூன் 12 ஆம் தேதியில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாமல், குறுவை சாகுபடி சரிவர நடைபெறவில்லை. இந்த வருடமாவது குறுவை சாகுபடி செய்யலாம், அதற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் காத்திருந்தார்கள். ஆனால் தமிழக அரசு வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதிக்கு திறக்க வேண்டிய மேட்டூர் அணையை, போதிய தண்ணீர் இல்லாததால் திறக்கப்படாது என்று அறிவித்திருக்கிறது.

இதனால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்து, கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்படி விவசாயிகள் படும் வேதனைக்கெல்லாம் காரணம் மத்திய மாநில அரசுகளே. ஏனென்றால் காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உரிய காலத்தில் திறக்காத கர்நாடக அரசிடம் இருந்து தமிழக உரிமையை நிலைநாட்ட தவறிய அரசாக ஒருபுறம் தமிழக அரசு இருகின்றது என்றால் மறுபுறம் கர்நாடக அரசை வலியுறுத்த தவறிய அரசாக மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும், இன்னும் அந்த ஆணையத்துக்கு உட்பட்ட 4 மாநில உறுப்பினர்களில் கர்நாடக மாநில உறுப்பினர் நியமிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. இதிலும் மத்திய அரசு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கிறது.

ஆணையம் அமைக்கப்பட்ட உடனேயே ஆணையத்துக்கான முழுநேர தலைவர், மாநில உறுப்பினர்கள் ஆகியோரை காலம் தாழ்த்தாமல் நியமித்து, ஆணையத்தின் செயல்பாட்டை ஆரம்பித்து, ஆணையத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து தமிழகத்துக்கு மட்டுமல்ல காவிரி நதீநீருக்கு உரிய அனைத்து மாநிலங்களுக்கும் உரிய தண்ணீரை திறக்க ஏற்பாடு செய்திருந்தால் தமிழகத்துக்கான காவிரி நதிநீர் கிடைத்திருக்கும். அந்த தண்ணீரும் மேட்டூருக்கு வந்து சேர்ந்து, வருகின்ற ஜூன் 12 ஆம் தேதிக்கு மேட்டூர் அணையை திறந்திருக்க முடியும்.

எனவே இந்த வருடமும் மேட்டூர் அணை திறக்கப்படாமல், குறுவை சாகுபடி செய்ய முடியுமா என்ற ஏக்கத்தில், சோகத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள். ஏற்கனவே விவசாயத் தொழில் நலிவடைந்து வருகின்ற சூழலில் இப்போது நடைபெற வேண்டிய குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை என்றால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலையே ஏற்படும்.

எனவே விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கு தமிழக அரசு உதவிகள் செய்து, சலுகைகள் வழங்கி, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவது உட்பட அனைத்து முயற்சிகளையும் எடுத்து விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்’’ என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

kaveri-river

தண்ணீர் தராமல் துரோகம்

தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் …

Bitnami