myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Monday , November 19 2018
Home / காவிரி நதி நீர் / நீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும்
Fresa Technologies

நீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும்

 

தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பருவமழை தொடங்குவதற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய பாஜக. அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழலில் வெளியிட உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் காலம் தாழ்ந்து வெளியிடப்பட்டுள்ளது. எனவே மத்திய பாஜக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சியுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வரும்போது, காவிரி நதியிலிருந்து தமிழகத்துக்கான தண்ணீர் திறக்கப்பட வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும். அதன் மூலம் வருகின்ற 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏதுவாக இருக்கும்.

 gk-vasan2

குறிப்பாக தமிழகத்தில் சுமார் 25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் காவிரி நதிநீரை நம்பியே பாசனம் செய்யப்படுகிறது. அதே போல தமிழகத்தில் உள்ள சுமார் 25 மாவட்ட மக்களுக்கு காவிரி நதிநீர் குடிநீர் ஆதாரமாக உள்ளது. எனவே தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் காலம் தாழ்த்தாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டிய அவசியத்தை உணர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் தமிழக அரசு மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்ட மேம்பாட்டிற்காக மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வரை குடிநீருக்காக ஆழ்குழாய் (போர்வெல்) கிணறுகள் உள்ள 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு தடுப்பணைகள் மற்றும் கதவு அணைகள் கட்ட வேண்டும். அதே சமயம் இப்பகுதிகளில் உள்ள 19 கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

மழைக்காலங்களில் காவிரி நதியில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலப்பதால் சுமார் 25 டி.எம்.சி. தண்ணீர் வீணாகிறது. இப்படி தண்ணீர் வீணாகமல் இருப்பதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டபடி மாயனூரில் இருந்து வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் வறட்சி மாவட்டங்களாக உள்ள சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் தண்ணீர் கிடைக்கும். அதே போல காவிரி ஆறு, வைகை ஆறு, குண்டாறு இணைப்பு திட்டம் போன்று பல்வேறு ஆறுகளின் இணைப்புத் திட்டத்திற்கும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

குறிப்பாக காவிரி வடிநிலத்தில் உள்ள பாசன அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் பணிக்காக சுமார் 16 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசிடம் தமிழக பொதுப்பணித்துறை விண்ணப்பித்து பல ஆண்டுகளாக இன்னும் பெற முடியாமல் கிடப்பில் உள்ளது. அந்த நிதியை கேட்டுப்பெற வேண்டிய கட்டாயமும், அவசியமும் தமிழக அரசுக்கு உண்டு. அந்த நிதியைப் பெற்று மேட்டூர் அணையில் இருந்து கடைமடை வரை உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும் புனரமைக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்கும். எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை இன்னும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். இதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும், கூலித்தொழிலாளர்களையும், பொதுமக்களையும் காப்பாற்ற, நீர் ஆதாரத்தை சேமிக்க, மாநில உரிமையை நிலைநாட்ட தமிழக அரசும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

kaveri-river

தண்ணீர் தராமல் துரோகம்

தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் …

Bitnami