Monday , August 19 2019
Home / Postal Employees / அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
Fresa XPress

அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

 

நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலி யுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

 postal-strike1

நாடு முழுவதும் கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பணியாற்றி வரும் சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர், தங்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பணிபுரிவோரை அஞ்சல் துறையின் ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு, கூடுதல் விடுப்பு தொடர்பான கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் நிலைய எழுத்தர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், 4-ம் பிரிவு ஊழியர்கள் உள்ளிட்டோர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

postal-strike2

ஊழியர்களின் வேலைநிறுத் தப் போராட்டத்தால் அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் சேவையை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Fresa BPO

About musthafa