Sunday , September 22 2019
Home / த.மா.கா செய்திகள் / காவிரிக்கான தமிழகத்தின் குரல்
Fresa XPress

காவிரிக்கான தமிழகத்தின் குரல்

மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று சென்னையில் காவிரிக்கான தமிழகத்தின் குரல் நடைபெற்றது.

தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் புளியூர் நாகராஜன்,

பல்வேறு விவசாய சங்க உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களுடைய குரலைப் பதிவு செய்தனர்

இன்று நடைபெற்ற நிகழ்வில் காவிரி விவகாரம் தொடர்பாக நிரந்தரத் தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

காவிரி குறித்து உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இருக்கம் தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து ஏரிகளையும், குளங்களையும் தூர் வார வேண்டும். மற்றும் சிற்றணைகள், தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

kaveri-kamal

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மைப் பகுதியாக அமைக்க சட்டபூர்வமான முயற்சிகள் எடுக்க வேண்டும்.

அனைத்து விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இணையாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும், கவனித்து தீர்வு காண வேண்டும்.

mettur-dam

மேலும் பல கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கண்காளிக்கவும், செயலாற்றவும், விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அதற்காக மக்கள் நீதி மய்யம் வழிவகை செய்து, தொடர்ந்து வழி நடத்த உதவியாக இருப்போம் என்று அறிவித்துள்ளார்கள்

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …