myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Monday , November 19 2018
Home / வர்த்தகர் அணி / சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி
Fresa Technologies

சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

tmc-awards

வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில இணைச்செயலாளர் மால்மருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய நடிகர் ரமேஷ்கண்ணா(கலைத்துறை), கே.ராஜா(வணிகத்துறை), தேவானந்த்(கல்வித்துறை), கே.கே.பில்டர்ஸ் (கட்டிடத்துறை), சங்கர்ராஜ்(உணவுத்துறை), டாக்டர் காமராஜ்(மருத்துவத்துறை) உள்பட 9 பேருக்கு ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Fresa Technologies

About musthafa

Bitnami