myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Home / அந்யோதயா / தாம்பரம்- நெல்லை ‘அந்யோதயா’ எக்ஸ்பிரஸ்
Fresa Technologies

தாம்பரம்- நெல்லை ‘அந்யோதயா’ எக்ஸ்பிரஸ்

தமிழக மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தாம்பரம்- நெல்லை ‘அந்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜிகே வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தாம்பரம் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ‘அந்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க மத்திய ரயில்வே துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாம்பரத்தில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 3.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். முக்கியமாக அவசர நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாத பயணிகள் பயன்பெறுவதற்காக இந்த ரயிலில் முன்பதிவில்லா 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

train

குறிப்பாக தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதியே இயக்கப்படுவதாக அறிவித்துவிட்டு இன்னும் இயக்கப்படாமல் இருப்பது நியாயமில்லை.

அதுவும் இப்போது கோடை விடுமுறைக்காலத்தில், ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற வேளையில், அந்யோதயா ரயிலை இயக்க ஆரம்பிக்காமல் அப்படியே வைத்திருப்பது ஏற்புடையதல்ல.

தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் வெளியூர் செல்வதற்கு பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் ரயிலைத் தான் நாடிச் செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது பொது மக்களின் ரயில் பயணத்துக்கு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமை.

train1

இச்சூழலில் சென்னை ஐசிஎப்-ல் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அந்யோதயா ரயில் இன்னும் இயக்கப்படாமல் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஏன்? எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த ரயிலை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

மேலும் இந்த ரயிலை ஏற்கனவே ரயில்வே துறை அறிவித்தபடி சிதம்பரம், கும்பகோணம், கொடைக்கானல் சாலை, கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ள அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாமல் இருந்தால் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்காது. அது மட்டுமல்ல பொது மக்களின் பயணக்கட்டணத்தை கவனத்தில் கொண்டும், சேவை மனப்பான்மையுடன் ரயிலை இயக்க முன்வந்தால் தான் அது மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையாக இருக்கும்.

எனவே தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்களின் போக்குவரத்துக்கு பயனளிக்கும் வகையில் அந்யோதயா ரயிலை உடனடியாக இயக்கவும், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அறிவித்த வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்லவும் மத்தியஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bitnami