myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Home / காவிரி நதி நீர் / காங்கிரஸ்- பா.ஜனதா கட்சிகளின் சுயரூபம்
Fresa Technologies

காங்கிரஸ்- பா.ஜனதா கட்சிகளின் சுயரூபம்

 

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா கட்சிகளின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது- வாசன்

 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
GK-vasan11
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் 2 தேசிய கட்சிகளின் (காங்கிரஸ்- பா.ஜனதா) சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் இந்த தேசிய கட்சிகளை இனிமேல் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு 10 நாட்கள் கால அவகாசம் கேட்டது ஏற்புடையதல்ல.

அதேபோல 14-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் வழங்கியது வருத்தம் அளிக்கிறது. 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு ஏன் கொடுக்கவில்லை? என்று கோர்ட்டு கேள்வி கேட்காதது ஏமாற்றமாக உள்ளது.

விவசாயிகளின் உயிர் பிரச்சனை முக்கியம் அல்ல. கர்நாடக தேர்தல் தான் முக்கியம் என்று மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காலம் தாழ்த்தாமல், சட்டத்தை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடிய உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

Meethane

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை திணிக்க நினைப்பது ஏற்புடையதல்ல. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் எதிர்ப்போம். விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம்.

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வு குழப்பத்திற்கு சி.பி.எஸ்.இ.யின் நிர்வாக திறமையின்மை தான் காரணம்.

த.மா.கா.வை வலுப்படுத்த வேண்டும் என்று கிராமங்கள் தோறும் 2 கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். 3-வது கட்ட சுற்றுப்பயணம் அடுத்த மாதம்(ஜூன்) 2-வது வாரத்தில் தொடங்கப்படும். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

நன்றி :  மாலை மலர்

Fresa Technologies

About musthafa

Check Also

gk-vasan3

நீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும்

  தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bitnami