தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்திய மருத்துவ கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கு இந்திய முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த தேவையில்லை என்று 2013–ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று சுகாதார துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல் ஆகும்.
எனவே மத்திய அரசு சுகாதார துறை மூலம் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.