கும்பகோணம் மகாமகம் திருவிழா சிறப்புடனும், பாதுகாப்புடனும் நடைபெற தமிழக அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

தற்போது தொடங்கியிருக்கும் மகாமகத் திருவிழாவிற்காக, கடந்த இரண்டு நாட்களாக இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இச்சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் அலை மோதுகின்ற நிலையில், அவர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் இத்திருவிழாவிற்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு தேவையான தங்குமிடங்கள், குடிநீர், சுகாதார வசதிகள், கழிப்பிட வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிக அளவில் ஏற்படுத்தி தர வேண்டும். மகாமக குளத்தைச் சுற்றிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.