வருகிற 20–ந்தேதி முதல் த.மா.கா. வேட்பாளர்கள் நேர்காணல்

த.மா.கா. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன.

சென்னையில் உள்ள 18 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. மற்ற தொகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் மனுக்கள் வாங்கப்பட்டன.

விண்ணப்ப மனுக்களை மாவட்ட தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து வருகிறார்கள். இந்த நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

மாநிலம் முழுவதும் 4,885 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 20–ந்தேதி முதல் 23–ந்தேதி வரை 4 நாட்கள் தி.நகரில் உள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது என்றார்.