இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட வேண்டும்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவினாசி – அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக, அப்பகுதி விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றும் வாசன் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகள் போன்றோர்களின் நலன் காத்திடும் வகையில் வெளியிட்டுள்ள அறிவிப்புக்களை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.