பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் இந்த இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது வரவேற்கக்கூடிய அம்சமாகும். இதனை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.