myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Wednesday , September 26 2018
Home / 2016 / February

Monthly Archives: February 2016

இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட வேண்டும்

gkvasan

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவினாசி – அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக, அப்பகுதி விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றும் வாசன் கேட்டு …

Read More »

வருகிற 20–ந்தேதி முதல் த.மா.கா. வேட்பாளர்கள் நேர்காணல்

candidate

த.மா.கா. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் உள்ள 18 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. மற்ற தொகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் மனுக்கள் வாங்கப்பட்டன. விண்ணப்ப மனுக்களை மாவட்ட தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து வருகிறார்கள். இந்த நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– மாநிலம் முழுவதும் 4,885 பேர் தேர்தலில் போட்டியிட …

Read More »

கும்பகோணம் மகாமகம் திருவிழா சிறப்புடனும், பாதுகாப்புடனும் நடைபெற தமிழக அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

kumbakonam

தற்போது தொடங்கியிருக்கும் மகாமகத் திருவிழாவிற்காக, கடந்த இரண்டு நாட்களாக இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இச்சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் அலை மோதுகின்ற நிலையில், அவர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் இத்திருவிழாவிற்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு தேவையான தங்குமிடங்கள், குடிநீர், சுகாதார …

Read More »

2016 – 17 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

gkvasan7

2016 – 17 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும். மத்திய ரயில்வேதுறை அமைச்சர் 2016-17 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை இந்த மாதம் இறுதியில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்திய ரயில்வேயில் சுமார் 13 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ரயிலில் தினமும் சுமார் 2 கோடியே 30 இலட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். எனவே ரயில்வேதுறை …

Read More »

தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா.வினர் அந்தந்த மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது

gkvasan5

தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா.வினர் அந்தந்த மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது அனைத்து மாவட்டங்களிலும் கட்சியினர் ஆர்வமாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் , எனது தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூடி வேட்பாளர்களை தேர்வு செய்வர்.

Read More »

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு

gkvasan4

நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் இந்த இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது வரவேற்கக்கூடிய அம்சமாகும். இதனை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை …

Read More »

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

gkvasan3

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய மருத்துவ கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கு இந்திய முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த தேவையில்லை என்று 2013–ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று சுகாதார துறை மூலம் …

Read More »

தமாகாவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

gkvasan1

தமாகாவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் காணப்படும் குளறுபடிகளை களையவேண்டும். போலி வாக்காளர்களை நீக்கவேண்டும். வாக்குச்சாவடி கோளாறுகளின்றி தேர்தல் அமைதியான முறையில் ஜனநாயகத்திற்கு உகந்தமுறையில் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Read More »

த.மா.கா தேர்தல் ஆயத்தபணிக்கு தயாராகி வருகிறது.

gkvasan

கடந்த ஒருமாத காலமாக இயக்கத்தை பலப்படுத்தவும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவரணியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து தேர்தல் நிலைப்பாடு குறித்து அவர்களின் விருப்பங்களை பதிவு செய்து வருகிறேன். மேலும் முன்னனி தலைவர்கள், உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன். ஜி.கே.வாசன் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்

Read More »

த.மா.கா தேர்தல் ஆயத்தபணிக்கு தயாராகி வருகிறது.

gkvasan

கடந்த ஒருமாத காலமாக இயக்கத்தை பலப்படுத்தவும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவரணியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து தேர்தல் நிலைப்பாடு குறித்து அவர்களின் விருப்பங்களை பதிவு செய்து வருகிறேன். மேலும் முன்னனி தலைவர்கள், உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன். ஜி.கே.வாசன் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்

Read More »
Bitnami